திருப்பூர், ஜூன் 3 தமிழ்நாட்டில் கிராம நல்வாழ்வு செவிலியர்கள் ஆக வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நல்வாழ்வு செவிலியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கிராம நல்வாழ்வு செவிலி யர் சங்கத்தின் 6ஆவது மாநில மாநாடு திருப்பூரில் திங்களன்று எழுச்சியாக நடைபெற்றது
இம்மாநாட்டில் ஆண், பெண் பாலின பாகுபாடு களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும், குழந்தை மரணம், மகப்பேறு மரணம் ஆகிய நிகழ்வுகளில் கிராம சுகாதார செவி லியர்களை மட்டும் பொறுப்பாக்கு வதை கைவிட வேண்டும், ஊட்டச் சத்து துறையில் இருந்து கிராம செவிலியர்களாக பணியமர்த்தப் பட்டவர்களின் 50 சதவிகித பணிக் காலத்தை ஓய்வூதிய பலன்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப் படுத்த வேண்டும், கிராம நல்வாழ்வு செவிலியர் பணித்தன்மை குறித்த அர சாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment