குடந்தை, ஜூன் 1 குடந்தை கழக மாவட்ட இளைஞரணி சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு மூன் றாவது நிகழ்ச்சி 29.5.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செந்தமிழன் தலைமையேற்றும் மாவட்ட இளை ஞரணி தலைவர் சிவக்குமார் முன்னிலை யேற்றும் கழக பேச்சாளர் மானமிகு இரா.பெரியார் செல்வன் " திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் வெற்றி" என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை மாநகர இளைஞரணி தலைவர் மனோ கரன் வரவேற்றும், மாநகர இளைஞரணி தோழர் பிரவீன்ராஜ் நன்றியும் கூறி உரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நிம்மதி, மண்டல செயலாளர் குருசாமி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன்,மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் திரிபுரசுந்தரி, மாநகர செயலாளர் ரமேஷ், மாநில மாணவர் அணி துணை செயலாளர் அஜிதன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், திருப்பனந்தாள் ஒன் றிய செயலாளர் மோகன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் பவானி, மாநகர மகளிர் அணி செயலாளர் அம்பிகா, மாநகர துணை தலைவர் காமராஜ், ஒன்றிய இளைஞரணி தலைவர் தென்றல் சதிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புதிய இளைஞர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment