கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை பன்னாட்டு கருத்தரங்கம் - கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை பன்னாட்டு கருத்தரங்கம் - கண்காட்சி

சென்னை, ஜூன் 3-  சென்னையைச் சேர்ந்த வாட்டர் டுடே என்ற மாத இதழ் ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டு தண்ணீர் கண் காட்சி 2022  சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள  வர்த்தக மய்யத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. 

கண்காட்சியை யொட்டி பன்னாட்டு கருத்தரங்கமும் நடைபெற்று வருகிறது.  வரும் 5ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சி  தென்கிழக்கு ஆசியா விலேயே  மிகப்பெரிய அளவில் நடத்தப்படும்  தண்ணீர்  கண்காட்சி என்று  வாட்டர்  டுடே நிர்வாக இயக்குநர் எஸ்.சண்முகம் கூறினார்.  இந்த கண்காட்சியில் குடிநீர், கழிவுநீர் மேலாண்மை மற்றும் மறு சுழற்சி, தண்ணீர் விநியோகம் மற்றும் போக்குவரத்து, குடிநீர் சுத்தி கரிப்பு மற்றும் மேலாண்மை,  கடல் நீரைக்  குடிநீராக மாற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளை சேர்ந்த  சாதனங்கள், இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், உள்நாடு மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். 


No comments:

Post a Comment