தேசிய கல்விக் கொள்கை ஆய்வு: புறக்கணித்தது தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

தேசிய கல்விக் கொள்கை ஆய்வு: புறக்கணித்தது தமிழ்நாடு அரசு

சென்னை, ஜூன் 2  தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்வி அமைச்சர்கள் மாநாட் டில் பங்கேற்காமல் தமிழ் நாடு அரசு புறக்கணித்து உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை, ஒன்றிய அரசால் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனி னும், கரோனா பரவலால் அதன் அம்சங்களை நடை முறைப்படுத்துவ தில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை அமல்படுத் துவதில் ஒன்றிய கல்வி அமைச்சகம் தீவிரம் காட்டிவருகிறது.

ஆனால், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆரம்பம் முதலே எதிர்த்து வருகி றது. அதற்கு மாற்றாக மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணிக ளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

2 நாள் தேசிய மாநாடு

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜ ராத்தின் காந்தி நகரில் நேற்று தொடங்கியது. ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடக்கும் இந்த மாநாட் டில் பல்வேறு மாநிலங்க ளின் கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாநாட் டில் விவாதிக்கப்பட்டன.

இதனிடையே, இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. தேசிய கல்விக் கொள் கைக்கு எதிர்ப்பு தெரிவிக் கும் வகையில் தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருவரும் மாநாட்டை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உயர்கல் வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய கல்விக் கொள்கை அம லாக்கம் தொடர்பான பணிகளை முன்னெடுப் பதே இந்த தேசிய மாநாட் டின் நோக்கம். தேசிய கல்விக் கொள்கை எதிர்ப் பில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதால், தனது நிலைப்பாட்டை உணர்த்தும் விதமாக மாநாட்டில் பங்கேற்கா மல் அமைச்சர்கள் புறக்க ணித்துள்ளனர்’’ என்ற னர். இந்த மாநாடு இன் றுடன் (ஜூன் 2) நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment