இஸ்லாமிய சமூகத்தினர் உள்பட அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதியை நிலை நாட்டுவதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

இஸ்லாமிய சமூகத்தினர் உள்பட அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதியை நிலை நாட்டுவதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம்!

பெரியகுளம், ஜூன் 10 இஸ்லாமிய சமூகத்தினர் உள்பட அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதியை நிலை நாட்டு வதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (9.6.2022) பெரியகுளம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டத் திற்கு பொதுக்குழு உறுப்பினர் ம.பெ.மு.அன்புக்கரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேனி மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் பேபி சாந்தா தேவி, டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன், கம்பம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல் வன், கம்பம் மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட அமைப் பாளர் ஆண்டிப்பட்டி கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன், மண்டல செயலாளர் கருப்பு சட்டை நடராசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், பெரியகுளம் ஒன்றிய தலைவர் ஆதிதமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேனி மாவட்ட தலைவர் ச.இரகுநாகநாதன் தொடக்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் 

இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் சிறப்புரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் உரையின் சுருக்கம் வருமாறு:

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த பெரியகுளம் நகருக்கு வந்திருக்கிறோம். இங்கேயுள்ள வடகரை, தென்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறேன்‌‌. இந்தப் பகுதியின் மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் ம.பெ.மு. முத்துக்கருப்பையா, ச.வெ.அழகிரி, அப்துல் கபூர், மருதமுத்து , அழகுமலை, முத்தையா உள்ளிட்ட பல்வேறு தோழர்களின் அளப்பரிய தொண்டுக்கு முதலில் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். 

இங்கே பெருந்திரளாக கூடியிருக்கிற இஸ்லாமிய சமூகத்தினர் உள்பட அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதியை நிலை நாட்டுவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். மாநில உரிமையை மீட்டெடுக்க இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறோம். செத்த மொழி சமஸ்கிருதத்தை திணிக்க முயல்வதன் மூலம் இந்தியை புகுத்த பார்க்கிறார்கள். இந்த இயக்கம் வந்தபிறகு தானே ‘நமஸ்காரம்‘ ‘வணக்கம்‘ என்று ஆனது!!

அதேநேரம் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க விண்ணப்பம் செய்ய முடியும் என்று இருந்த நிலை மாறியது இந்த திராவிட இயக்கத்தால் அல்லவா? என்று உரையில் குறிப்பிட்டார் தமிழர் தலைவர் அவர்கள்.

பங்கேற்றோர்

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க.தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர் வே.செல்வம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆசையன், வி.சி.க. நாடாளு மன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்வாணன், வி.சி.க. மாவட்ட செயலாளர் நாகரத்தினம், சி.பி.எம். தாலுகா செயலாளர் மன்னர் மன்னன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில மகளிரணி செயலாளர் மெஹபூப் பீவி, நகர்மன்ற உறுப்பினர் ரூபினி ஜான், திருமதி சித்ரா தேவி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் சுரேஷ்,நாட்டு மாடு நலச்சங்க தலைவர் கலைவாணன், தி.மு.க.மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, திண்டுக்கல் மண்டல தலைவர் நாகராசன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆனந்த முனிராசன், மதுரை மண்டல செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர ப.க.தலைவர் கோபால் நன்றி கூறினார்.

குற்றாலத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

பெரியகுளம் கூட்டம் முடிந்து, குற்றாலம் நோக்கிப் பயணமான தமிழர் தலைவர் இரவு 2.15 மணிக்கு குற்றாலம் வந்தடைந்தார்.

அப்பொழுது பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் கவுதமன், தென்காசி மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் த.வீரன் உள்ளிட்ட தோழர்கள் பழங்களை அளித்து, சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

No comments:

Post a Comment