சென்னை, ஜூன் 2 ‘‘தமிழ் நாட்டில் பா.ஜ.க. என்றுமே வளர முடியாது. அந்த கட்சிக்கு கொள்கைகளே கிடையாது’’ என்று அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆளுங் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சி யாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. எதிர்க்கட்சி என்ற நிலையை மக்கள் மத்தியில் பெறவேண்டும் என்றால் போ ராடினால் மட்டும் போதாது, கொள்கைகள் இருக்க வேண் டும். தமிழ்நாட்டில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்ற வலி யுறுத்தலை ஒன்றிய அரசு சட்ட ரீதியாக மேற்கொள்ளும்போது, அதை மக்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள். இதற்கு உதாரணம் நீட் தேர்வு. சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இத்தேர்வில், நமது மாணவர்கள் சிரமப் படுகிறார்கள்.
இதனால் வடமாநிலத்த வர்கள் தமிழ்நாடு வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும்பெற்று, தமிழ்நாட்டு மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது ஒன்றிய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதேபோலதான் காவிரி நதிநீர் பிரச்சினையிலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன் றிய அரசு முறையாக நிறை வேற்றவில்லை. முல்லை பெரி யாறு பிரச்சினையிலும் இதே போக்கைத்தான் ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. மாநில உரிமையை பறிக்கக்கூடாது இலங்கையில் ஈழத்தமிழர் களுக்கு பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் மறந்து இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு இப்போது கொஞ்சி குலாவி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழ் இன விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவில் மாநிலங்களுக்கு இருந்து வந்த சுயாட்சி அதிகாரம், படிப்படி யாக பறிக்கப்பட்டு, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
மாநில அரசுகளை பொம் மைகளாக, பஞ்சாயத்துகளாக நடத்தும் போக்கில் பா.ஜ.க. அரசு ஈடுபடுகிறது. மாநிலத்தின் ரூ.1.5 லட்சம் கோடி விற்பனை வரியை பறித்தார்கள். ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்தனர். பீகார், உத்தரப்பிரதேசத்தை பின்தங்கிய மாநிலங்களாக மாற்றி, நமது பணத்தையெல்லாம் அங்கே கொடுத்து, சோம்பேறி களை மேலும் சோம்பேறிகளாக ஒன்றிய அரசு ஆக்குகிறது. தமிழ்நாட்டில் 40 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருக் கும் நிலையில், நமது பணத்தை அங்கே வழங்கும் போக்கை கண்டிக்கிறோம். மாநில உரிமையை பறிக்கக்கூடாது.
பா.ஜ.க. வளர முடியாது
பா.ஜ.க.வுடன் தேர்தல் உடன்பாடு என்பதற்காக எங்கள் உயர் கொள்கைகளை விட்டுவிட முடியுமா?. உள் ளாட்சி தேர்தலில் தமிழ் நாட்டை பிடித்துவிட வேண் டும் என்ற ஆசையில் தப்புக் கணக்கு போட்டு தனித்து நின் றனர். தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யாமல் 'எங்களுக்கு ஓட்டு போடுங்கள், ஆட்சியை பிடிக்க வேண்டும், அடுத்த பிரதான எதிர்க்கட்சி நாங்கள்தான்' என்று சொன்னால் மக்கள் ஏற்பார்களா?. பா.ஜ.க.வை பொறுத்தவரையில் அவர்களை கண்டிக்க எங்களுக்கு உரிமையில்லை.
ஆனால் மக்களுக்கு தெரியும், தங்கள் எண்ணங்களை ஈடேற்றுபவர்கள் யார் என்று... அந்த உண்மை நிலைக்கேற்ப தங்கள் கொள்கைகளை, செயல் பாடுகளை மாற்றிக்கொண்டால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் பா.ஜ.க. வளரவே முடியாது. பா.ஜ.க. புதிதாக எதையும் உருவாக்கிவிடவில்லை. அவர்களிடம் மக்கள் இல்லை. மக்களுக்கான கொள்கைகளும் இல்லை. எனவே அவர்களுக்கு வளர்ச்சி இல்லை.
இதைப்பற்றி நாங்கள் அனுதாபப்பட வேண்டியதும் இல்லை. பா.ஜ.க. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களை ஈர்க்க முயற்சி செய் யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment