தேனி, ஜூன் 10- கோயில் திருவிழாவைக் காண சென்ற இடத்தில் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெரியகுளம் கைலாசப்பட்டியில் நடைபெறுகின்ற முத்தாலம்மன் கோவில் திருவிழாவைக் காண தர்மராஜ் என்பவர் வீட்டிற்கு அவரது உறவினர்களான பேரையூர் தாலுகா தொட்டியபட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், நிலக்கோட்டை, மீலாப்பட்டியைச் சேர்ந்த ருத்ரன், மணிமாறன், செம்பட்டி வேலன்சேர்வை காரன்பட்டியைச் சேர்ந்த சபரி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் ஜூன் 9 அன்று கைலாசபட்டி,பாப்பியன்பட்டி கண்மாய்க்கு குளிக்கச்சென்றனர்.
இதில் நான்குபேரும் நீர் மற்றும் சகதியில் மூழ்கினர். அப்போது அருகே இருந்த சின்னசாமி என்பவர் மூழ்கிய நான்கு பேர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி உள்ளார். இதில் ருத்திரன் என்ற சிறுவன் தவிர்த்து மற்ற மூன்று நபர்களும் இறந்தனர். இறந்த பன்னீர்செல்வம், சபரி,மணிமாறன் ஆகியோரின் உடல்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ருத்திரன் ஆபத்தான நிலையில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையளிக் கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment