சென்னை, ஜூன் 2 முதுநிலை மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் 2021 நவம்பர் - டிசம்பர் பருவ தேர்வுகள் எழுதிய முதுநிலை மற்றும் முனைவர் படிப்பு மாணவர்கள் (முதலாமாண்டு மாணவர்களை தவிர்த்து) மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
அதன்படி மறுமதிப்பீட்டு கட்டணமாக ரூ.400அய் செலுத்தி, அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் இணையதளம் சென்று இணைய வழியாக 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாணவன் அதிகபட்சமாக 5 பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment