சென்னை, ஜூன் 1 சென்னை, செங்கல்பட்டு மாவட் டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங் களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த அன்றாட கரோனோ பாதிப்பு தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி யுள்ளார்.
அதில், "பொதுமக்கள் கூடக்கூடிய பொது இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment