சென்னை, ஜூன் 10- தமிழ் நாட்டில் ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் போதிய அக்கறை ஒன்றிய அரசால் செலுத்தப் படாமல், உரிய நிதிஒதுக்கீடு கள் செய்யப்படாமல் வெற்று அறிவிப்பாக மட்டுமே இருப் பதற்கான சான்றாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்புள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அரசு அமைந்த பிறகு அறிவிக்கப்பட்ட கலை ஞர் நூலகம் எழிலோடு அமையும் வண்ணம் அதன் கட்டுமானப்பணி 90 விழுக்காட்டளவில் முன் னேற்றத்தில் உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட விழாவோடு, வெறும் ஒற்றை செங்கல் லோடு அதன் கட்டுமானப் பணிகளில் முன்னேற்றம் ஏதுமின்றி நிற்கிறது அதற்குக் காரணம் ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கையே ஆகும். தமிழ், தமிழ்நாடு என்றாலே புறக்கணிக்கும் போக்குதான் ஒன்றிய பாஜக அரசிடம் உள்ளதை மதுரை எய்ம்ஸ் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
‘‘8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கல்லோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சி கள்'' என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7.6.2022 அன்றிரவு நேரில் பார்வையிட்டார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் வெளியிட்டுள்ள பதிவில்,
‘‘அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம் - அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றைச் செங்கல்லோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ் இரண்டும் மதுரையின் சாட்சிகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment