அமெரிக்காவின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக், அண்மையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது. இதற்கான அல்காரித நிரலை, 'கே ஹெல்த்' என்ற தொலைவு மருத்துவ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கே ஹெல்தின் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ரத்த அழுத்தம் தொடர்பான நோயறிதல் மற்றும் சிகிச்சையை விரைவுபடுத்த இந்த சேவையைப் பயன்படுத்துவர். மேயோவிடம் ஒரு கோடி நோயாளிகளின் சிகிச்சை விவரங்கள் கொண்ட தரவுக் களஞ்சியம் உள்ளது.இந்த தரவுகளிலிருந்து தனி நபர் அடையாளங்களை நீக்கிவிட்டு, செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தருவர். இந்த தரவுகளுடன், புதிய நோயாளியின் தரவுகளை ஒப்பிட்டு, செயற்கை நுண்ணறிவு கணிப்புகளை வழங்கும்.
No comments:
Post a Comment