சென்னை
சென்னை, ஜூன் 2 சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் சார்பில் திருவொற்றியூரில் ஜூன் 5-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. அமிர்த ஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் சார்பில் திருவொற்றியூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் ஜூன் 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் நடைபெற உள்ள இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலும், தொழிற்படிப்பு, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்புக்கு என அனைத்து வேலை நாடுநர்களும் பங்கேற்கலாம்.
கல்விச் சான்றுகள், பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 8ஆம் தேதி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் 3 மாதத்துக்கு ஒருமுறை தனியார் துறை வேலைவாய்ப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் மற்றும் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கல்லூரி இணைந்து வரும் 8ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில் 60க்கும் மேற்பட்ட தனியரர் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 3,500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய
உள்ளன.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 முதல் 10, 12, பட்டப்படிப்பு, அய்டிஅய், டிப்ளமோ, இன்ஜினியரிங், டிப்ளமோ நர்சிங், ஆய்வக உதவியாளர், மருந்தாளுநர் படித்த வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வரும் 8ஆம்தேதி காலை 9 மணிமுதல் 2 மணிவரை செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கல்லூரியில் நடக்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment