ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

முகமது ஜுபைரின் கைது நீதியின் தலைகீழ் செயலாகும்.

அரசியல் வசதியின் போது ணிஞி மற்றும் சிஙிமி ரெய்டு கள், அப்பாவி மாணவர்கள் மீது ஹிகிறிகி குற்றச்சாட்டு களைப் பயன்படுத்துதல், வகுப்புவாத இலக்கு வைத்து சொத்துகளை புல்டோசிங் செய்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு என்பதாக இந்தக் கைதினை பெரிய வடிவத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிறார் பத்திரிக்கையாளர் பானு பிரதாப் மேத்தா.  

தி டெலிகிராப்:

இரண்டு முகங்கள்: இந்தியாவின் அரசியல் நிலைப் பாடு குறித்த தி டெலிகிராப் தலையங்கம்:

ஒருபுறம் முகமது சுபைர் மற்றும் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை கைது செய்த ஒன்றிய அரசின் நடவடிக்கை,

மக்களின் பேச்சுச் சுதந்திரத்தைக் காக்க முக்கி யத்துவம் அளிக்கப்படும். பொது விவாதம், பன் முகத்தன்மை கொண்ட ஊடகம், தகவல்கள் தடையின்றி எளிதில் அனைவருக்கும் சென்றடைதல், வெளிப்படைத்தன் மையை ஏற்படுத்துதல் உள்ளிட் டவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அமைதி வழிப் போராட்டங்களுக்கு மதிப் பளிக்கப்படும் என ஜி-7 மாநாட்டில் மோடி கையெழுத் திட்டுள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment