சென்னை, ஜூன் 10 நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அக விலைப் படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
நியாய விலை கடை பணியா ளர்கள், அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித் துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழு வதும் வேலைநிறுத்தம் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அக விலைப் படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில் "தமிழ் நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனை யாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும், பொது மக் களுக்கு அத்தியாவசியப் பொருட் கள் வழங்குவதில் இடையூறு ஏற் படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணி யாற்றுமாறு கேட்டுக் கொள் ளப் படுகிறார்கள்" என்று கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment