மதுரையில் கோயில் விழாவில் தீ விபத்து பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

மதுரையில் கோயில் விழாவில் தீ விபத்து பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஜூன்10-   மதுரையில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பெரும்  தீ விபத்து ஏற்பட்டது. இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேல வாசல் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்றுவருகிறது. 

கோவில் திருவிழாவிற்காக கோவிலை சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 8.6.2022 அன்றிரவு  கோயில் திருவிழாவில்   பட்டாசுகள் வெடித்தபோது, அதிலிருந்து பரவிய  நெருப்பு திருவிழா பந்தலை பற்றி அப்பகுதியெங்கும் பரவியது. இதில் பக்தர்களின் வாகனங்களும் முழுமையாக எரிந்ததோடு கோவிலை சுற்றி இருந்த பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய  கடைகளில் முழுமையாக பரவியதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர்  விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.  

இதை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மேலவாசல் பகுதியை சேர்ந்த கண்ணன், குணா(எ)முருகேசன் ஆகிய இருவர் மீது திடீர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


No comments:

Post a Comment