தென்காசி,ஜூன் 30- தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த குருசாமியின் மூத்த மகன் சுப்புராஜ்(வயது 27). இவர் கடைய நல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். பள்ளி படிப் பின்போது விமான தொழில்நுட்பப் பொறியாளர் (ஏரோ னாட்டிக்கல் என்ஜினீயர்) ஆக வேண்டும் என்று எண்ணத்தை கொண்ட சுப்புராஜ், கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 4 ஆண்டுகள் படித்துவிட்டு கடந்த 2016ஆம் ஆண்டு சுப்புராஜ் சென்னைக்கு சென்றார். அங்கு சக நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடியபோது தான் வனத்துறையின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.
இதனால் எப்படியாவது அரசு வேலையில் அதுவும் வனத்துறை பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்த சுப்புராஜ் சென்னையில் உள்ள அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர் வாணையத்தில் 2 ஆண்டுகள் படித் தார். அதனை தொடர்ந்து அரசு தேர்வு எழுதிய சுப்புராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு வனவர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட சாத்தான் குளம் பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார். ஆனாலும் அதே வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார். அண்மையில் அவர் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தரத்திலான பணிக்கு தேர்வாகி உள்ளார். இதற்காக ஏற்கெனவே 5 முறை தேர்வு எழுதிய அவர் 6ஆவது முறையாக தேர் வெழுதி வனத்துறை அதிகாரியாக வெற்றி பெற்றுள்ளார்.
நான் கடையநல்லூர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 1,200-க்கு 1,088 மதிப்பெண்கள் பெற்றேன். விமானத் துறையில் சேர்வதற்காக கோவையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் அதன்பின்னரே வனத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதை அறிந்து அந்த பணியில் சேர என்னை தயார்படுத்திக் கொண்டேன். இதற்காக கடுமையாக உழைத்து நான் வெற்றி பெற் றுள்ளேன். வனவராக வெற்றி பெற்ற பின்னரும், எனக்கு ஆசை விட வில்லை. எனக்கு மேல் உள்ள அதி காரிகளை பார்க்கும்போதெல்லாம் அவர்களை போன்று உயரவேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே இருந்தது. இதனால் வனப்பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே உயர் பதவிக்கு படித்து வந்தேன். கடுமை யான வேலைக்கு நடுவிலும் தினமும் இரவில் உட் கார்ந்து படிப்பேன். அதன் மூலமாக 6-வது முயற்சியில் நான் வெற்றி பெற்று தற்போது வனத்துறை அதி காரியாகி உள்ளேன். என்னுடன் சேர்த்து மொத் தம் 108 பேர் தேர்ச்சி அடைந் துள்ளோம். இதில் நான் அகில இந்திய அளவில் 57ஆவது இடத்தை பிடித்துள்ளேன். நிறைய பேர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே அரசு வேலைக் கான தேர்வுக்கு தயாராகி வரு கிறார்கள். ஆனால் வேலைப் பளு காரணமாக அந்த லட்சியத்தை பாதியில் விட்டு விடுகிறார்கள். எனவே விடா முயற்சியுடன் கடுமை யான இன்னல்களுக்கும், வேலை பளுவுக்கும் இடையில் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
No comments:
Post a Comment