இதுதான் 'தினமலர்' மாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

இதுதான் 'தினமலர்' மாடல்!

31.5.2022 நாளிட்ட ‘தினமலர்' ஏடு இப்படி யொரு செய்தியை வெளியிடுகிறது.

‘‘கோவில் சிலைகள் புனரமைப்புக்கு நிதி திரட்டிய கார்த்திக் கோபிநாத் கைது'' - என்பதுதான் ‘தினமலரின்' தலைப்பு.

இதனைப் படித்தால் கோவில் சிலை களைப் புனரமைத்த ஒருவரை தி.மு.க. அரசு கைது செய்தது என்று பொருள்படும்.

ஆனால், உண்மை என்ன?

ஒரு கோவில் சிலையைப் புனரமைக்கப் போகிறேன் என்று கூறி, நிதி வசூல் மோசடி செய்துள்ளார்.

கோவில் காரியமாக இருந்தாலும், நிதி வசூல் செய்தால் இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெற்றாகவேண்டும் அவ் வாறு செய்யாமல் சம்பந்தப்பட்ட ஆசாமி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதன்மூலம் கோவில் நிதி அனுப்ப வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுபற்றிய புகார்கள் வந்த நிலையில், அத னடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஆணையின்படி சிறையில் உள்ளார்.

உண்மை இவ்வாறு இருக்க, ‘‘கோவில் சிலைகள் புனரமைப்புக்கு நிதி திரட்டிய கார்த்திக் கோபிநாத் கைது'' என்று ‘தினமலர்' செய்தி வெளியிடுகிறது என்றால், ‘தினமலரின்' பி.ஜே.பி. பாசமும், பத்திரிகா தர்மமும் (கோபி நாத் பி.ஜே.பி. பிரமுகர், தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலையின் கூட்டாளி - உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் கோபிநாத்தை அறிமுகப் படுத்தி வைத்தவரும் அண்ணாமலையே!) எத்தகையது என்பது இப்பொழுது விளங்க வில்லையா?

No comments:

Post a Comment