புகழின் உச்சியில் கலைஞர்! அன்னை மணியம்மையாரின் பெருமிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

புகழின் உச்சியில் கலைஞர்! அன்னை மணியம்மையாரின் பெருமிதம்!

தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று 28.5.1968 மற்றும் 29.5.1968 ஆகிய நாட்களில் “விடுதலை” யில் எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க தலையங்கத்தில் இருப்பதை எடுத்துக் கூறுவது தற்பொழுது பொருத்தமாக இருக்கும் என்பதால் குறிப்பிடுகிறோம்.

தமிழராட்சி கொண்டு வந்தவருக்கு சிலை வைப்பதில் தவறு என்ன என்று, பொது மக்களுக்காக, பொதுத் தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் பொது மக்கள் பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களை பாராட்ட, பெருமைப்படுத்த யோக்கிய மான பொது மக்கள் முயற்சிப்பது இயற் கையாகும். அதிலும் கலைஞர் அவர்கள் விஷயத்தில் பாராட்டத் தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன. கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத் தில் இருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை 25-,30 ஆண்டுகளாக பொதுத் தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகச் சிறை செல்லும் தன்மையில் பல முறை சிறை சென்றி ருக்கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சி ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கி யஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனமாக ஆக்கி இன்று மகா வன்மை பொருந்திய காங்கி ரசை எதிர்த்து தோல்வியடையச் செய்து வெற்றிக் கொடி கண்ட ஒரு முக்கியஸ்த ருக்கு ஒரு சிலை பயனடைந்த பொது மக்கள் அல்லது அக்கட்சியினர், அவ்வர சியலில் பற்றுள்ளவர்கள் சிலை வைக்க முன்வந்தால் இந்த காரியம் கட்சி மாறும் சின்னத்தனத்திற்கும் கிளர்ச்சி செய்யும் காலித்தனத்திற்கும் சமமான விவாதத்திற் குரிய காரியமாகுமா? என்று கேட்கிறேன். 

இப்படிப் பார்த்தால் இன்றுள்ள இந்த நாட்டிலுள்ள எல்லாச் சிலைகளையும் உடைத்து எறிய வேண்டுவதாகத் தானே ஏற்படும்? மகா அயோக்கியனும் இனத் துரோகியுமான கம்பனுக்குச் சிலை, தமிழ னுக்காக ஒரு காசு பயனுள்ள காரியமும் செய்யாத பாரதிக்கு சிலை, என்றெல்லாம் வைக்கப்பட்ட காலத்தில் ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. தமிழரின் பச்சைத் துரோகியாகிய  சத்தியமூர்த்திக்கு அவர் ஜாதிக்காரர்கள் எவ்வளவோ ஆடம்பரமான பாராட்டுகள் நினைவுகள் சின்னங்கள் நடத்திய காலத்தில் ஒருவரும் ஒருசிறு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பெசண்டுக்கு எதற்காகச் சிலை? பார்ப் பன வேஷம் போட்டு தமிழர் ஸ்தாபன மான ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க முற் பட்டார் என்பதல்லாமல் அந்த அம்மா வின் பொதுத் தொண்டு என்ன? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன?

எனவே தான் தமிழனைப் பாராட்டுவ தும், தமிழ் மக்களிடையில் பின் சந்ததிக்கு நினைவூட்டும் அறிகுறியாகும், கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்த வர், பொதுத் தொண்டு செய்வதில் சிறந்த வர், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து ஆட்சியை தமிழர்க்கு ஆக்கித் தந்தவர். எனவே கலைஞரின் சிலை தயாராகி இருப்பதை ஏற்பாடு செய்யப்பட்ட இடத் தில் கண்டிப்பாக வைத்து நிலை நிறுத் தியே ஆக வேண்டும் என்றும், இந்தக் கமிட்டி யார் கைவிட்டாலும் பொது மக்கள் முன் நின்று நடத்தியே ஆக வேண்டும் என்றும் இதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் எந்தவித இடை யூறுக்கும் இடம் கொடுக்காமல் ஆதர வளித்து தமிழர் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கலைஞருக்கு சிலை என்பது ஒரு நபரைப் பொறுத்து சொந்த விஷயமாக நான் கருத வில்லை. தமிழர்களின் தன்மானத்தைப் பொறுத்ததாகத்தான் கருதுகிறேன்.

இப்படி ஒரு பார்ப்பனருக்கு அறிவிப் பும் ஏற்பாடும் நடந்து முடிந்த நிலையில் இடையில் திடீரென நிறுத்தி விட்டால் பார்ப்பனர் சும்மா இருப்பார்களா? அதை யும் சிந்தியுங்கள் எனக் கூறி இப்போ தைக்கு இதை முடித்துள்ளேன். 

(விடுதலை 29.5.1968)


No comments:

Post a Comment