குரங்கு அம்மை நோய் அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

குரங்கு அம்மை நோய் அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்!

லண்டன், ஜூன் 25 குரங்கு அம்மை யால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குரங்கு அம்மை பரவல் உலகளாவிய அவசரநிலையாக அறி விக்கப்பட வேண்டுமா  என்பதை பரிசீலிக்க உலக சுகாதார அமைப் பானது, தனது அவசரக் குழுவை 23.6.2022 அன்று கூட்டியது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற் றும் கவலைக்குரியது என்று கூறி னார்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய் தியில் கூறியிருப்பதாவது: குரங்கு அம்மை நோயை உலகளாவிய அவசரநிலையாக  அறிவிப்பதன் நோக்கம், குரங்கு அம்மை நோய் இன்னும் அதிகமான நாடுகளுக்கு பரவும் அபாயத்தில் உள்ளது. இத்தகைய அறிவிப்பு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக பரவலாக மாறினால், தொற் றின் வேகம் அதிகரித்து  குழந்தை களுக்கு தொற்று ஏற்பட வாய்ப் புள்ளது.

சமூகப் பரவலாக மாறினால் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்க வேண்டும். இந்த நோயால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுவதை உறுதி செய்வதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

No comments:

Post a Comment