காரைக்குடி, ஜூன்11- சிவகங்கை மாவட் டம் காரைக்குடியில் ஒன்றிய நிதித்துறை மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசியலில் கூடுதலாக கவனம் செலுத்தும் வாய்ப்பாக மாநிலங் களவை உறுப்பினர் பதவி கிடைத்திருக் கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என் பது காங்கிரஸ் கட்சியின் விருப்பம். இலங்கை ஒரு காலத்தில் தனிநபர் வருமானத்தில் உயர்ந்த நாடாகவும், 98 சதவீதம் எழுத்தறிவுமிக்க மக்கள் மற் றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற நாடாகவும் இருந்தது. ஏற்றுமதியில் பல துறைகளில் முன்ன ணியில் இருந்த நாடு. அவர்களுக்கே இந்த நிலை வந்திருப்பதால் அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் உள்ளது.
அதாவது தன்னிச்சையாக முடிவு களை அரசு எடுக்காமல் பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசித்தும், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட் டும் எடுத்த முடிவுகள்தான் நிலைத்த முடிவுகளாக, நல்ல விளைவுகள் தரக் கூடிய முடிவுகளாக இருக்கும். தற் போது நம் நாட்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு அந்நிய காரணிகளும், உள்நாட்டு காரணிகளும் இருக்கின்றன. இரண்டும் சேர்த்துத்தான் விலைவாசி உயர்வை தீர்மானிக்கிறது. உள்நாட்டு காரணி களை நிர்ணயிப்பதில் ஒன்றிய அரசு முற்றிலும் தவறிவிட்டது. 3, 4 மாதங் களுக்கு முன்பே பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை அரசு குறைத்திருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.வரிவிகிதம் மற்றும் சுங்கவரியை குறைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் தடுக்க அரசு தவறி விட்டது. அதனால்தான் தற்போது பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இப்போது உக்ரைன் போர், கச்சா எண்ணை விலை உயர்வு போன்றவையும் சேர்ந்துகொண்டு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து முடிவு எடுத் தால்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பதை ஒன்றரை மாதங் களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி செய் திருக்க வேண்டும். அரசின் தாமதமான முடிவுகள் தான் தற்போது விலைவாசி உயர்வுக்கான காரணமாகும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment