கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஜாதி, மதம் அற்றவர் என மகளுக்குச் சான்று பெற்றனர் குழந்தைக்கு ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்: கோவையைச்சேர்ந்த பெற்றோரின் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஜாதி, மதம் அற்றவர் என மகளுக்குச் சான்று பெற்றனர் குழந்தைக்கு ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்: கோவையைச்சேர்ந்த பெற்றோரின் உறுதி

கோவை, ஜூன் 1 - பள்ளி, கல்லூரி களில் மாணவர் சேர்க்கையின் போது இடஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை பெறுவதற்கு ஜாதிச் சான்றிதழ் அவசியம் ஆகும். 

அதேநேரத்தில், எந்த ஜாதி, மத அடையாளமும் தேவையில்லை என்று கூறுவோருக்கு ஜாதி, மதம் அற்றவர் என சான்றளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் அர சாணை உள்ளது. எனினும், அச்சான்றிதழ் பெறுவதில் பெரும் அறைகூவலையே பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் பெரு மளவிலான எதிர்நீச்சல் போட்டு, தங்களின் மகளுக்கு  சான்றிதழைப் பெற்றுள்ளனர் அச்சிறுமியின் பெற்றோர்.

கோவையை சேர்ந்த இணையர் தங்களது மகளுக்கு ஜாதி மற்றும் மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர்.  கல்வி நிலையங்களில் குழந்தைகளை சேர்க்கும்போதே, அவர்களுடைய விவரங்களில் ஜாதி மற்றும் மதம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள் கேட்டு பெறுகின்றன. இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிலையில், தங் களது ஜாதி மற்றும் மதத்தினை குறிப்பிட விரும்பாதவர்கள் அதனை புறக்கணிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு முன்னரே அறிவித்திருந்தது.  இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றி தழை பெற்றுள்ளனர்.

கோவையில் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருபவர் நரேஷ் கார்த்திக். 

இவரது மகள் வில்மா. தற்போது மூன்றரை வய தாகும் வில்மாவை பள்ளியில் சேர்க்க முடிவெடுத்த நரேஷ் பல பள்ளிகளை அணுகி யுள்ளார். விண்ணப்ப படிவத்தில் மாணவியின் ஜாதி மற்றும் மதம் குறித்த தகவல் களை நரேஷ் பூர்த்தி செய்யாமலேயே விட்டிருக்கிறார். ஆனால், இதனை காரணம்காட்டி 22 பள்ளிகளில் அவரது மகளுக்கு இடம் கிடைக்க வில்லை. இதுபற்றி அவர் கூறுகையில்,"மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் ஜாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கடந்த 1973 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக் காக ஜாதி சான்றிதழ் கேட்கின்றனர்" என்றார்.

ஜாதி மற்றும் மதம் வேண்டாம்

இதனையடுத்து தனது மகள் வில்மாவிற்கு ஜாதி மாற்று மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கக் கோரி கோவை மாவட்டம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார் நரேஷ் கார்த்திக். இப்போது அவருக்கு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தனது மகளை ஜாதி, மத அடை யாளங்களை கடந்து வளர்க்க விரும் புவதாக கூறும் நரேஷ்," கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப் பட்டு உள்ளது. வேலைக்காக விண் ணப்பிக்கும்போது, ஜாதிப் பிரிவு களில் ழிசி  எனப்படும் ஜாதியற்றவர் களுக்கான பிரிவும் இருக்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

தனது மகளின் ஜாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாத நரேஷ் கார்த்திக், ஜாதி மற்றும் மதம் அற்றவர் என தனது மகளுக்கு சான்றிதழ் பெற்றிருப்பது பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment