முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.6.2022) வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரை சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவ சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; ‘உடன் பிறப்பே...' என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்!
இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் - தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை ‘தமிழினத் தலைவர்' கலைஞரைப் போற்றினேன்’’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment