திருப்பத்தூர், ஜூன் 16 திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் அன்பு வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் கேசி எழிலரசன், இணைச் செயலாளர் பெ.கலைவாணன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத்தலைவர் ம.கவிதா, பக மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பக ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் கோ.திருப்பதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நகர பக தலைவர் மு.ந.அன்பழகன், மகளிரணி விஜயா, நகர கழக தலைவர் துரை காளிதாஸ், பக எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் நா சுப்புலட்சுமி,மாவட்ட கழக துணைத்தலைவர் தங்க அசோகன்,சோலையார்பேட்டை ராஜேந்திரன், கந்திலி ஒன்றிய கழக தலைவர் பெ.இரா.கனகராஜ், மண்டல இளைஞரணி சிற்றரசு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
ஜூன் 19 அன்று செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டிற்கு நான்கு வாகனங்களில் 75 தோழர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment