கலைஞரின் முத்துக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

கலைஞரின் முத்துக்கள்

தேன் கூடும்,

கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான்.

காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட

உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.


அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே

ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால்,

உரிமைகளைப் பற்றிப் பேச

அவனுக்கு உரிமையே கிடையாது.


புத்தகத்தில் உலகைப் படித்தால்

அறிவு செழிக்கும்...

உலகத்தையே புத்தகமாய் படித்தால்

அனுபவம் தழைக்கும்...


உண்மையை மறைக்க முனைவது

விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்...


தோழமையின் உயிர்த்துடிப்பே,

துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.


குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்...

கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்...

பாராட்டும் புகழும் குவியும் போது

குட்டையான வாசலுக்குள்,

குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்.

இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்..!


'முடியுமா நம்மால்' என்பது

'தோல்வி'க்கு முன்பு வரும் தயக்கம்.

'முடித்தே தீருவோம்' என்பது

'வெற்றி'க்கான தொடக்கம்.


அதிருப்தியாளர்கள் வளரவளர

அவர்களின் மத்தியிலே

அவர்களை நடத்தி செல்லும்

தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்.


துணிவிருந்தால் துக்கமில்லை...

துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை.


தனிமை போன்ற

ஒரு கொடுமையும் இல்லை

அதைப்போல்

ஒரு உண்மையான நண்பனும் இல்லை.


வீரன் சாவதே இல்லை...

கோழை வாழ்வதே இல்லை...


ஓயாமல் உழைத்த ஒரு தமிழன்

இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான்

என்று என் கல்லறையில் எழுதப்படும்

எழுத்துக்களுக்காக நான் தவமிருக்கிறேன்

No comments:

Post a Comment