விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல்

விழுப்புரம், ஜூன் 3 விழுப்புரம் , திண்டிவனம்,  கள்ளக்குறிச்சி,  கடலூர்,  சிதம்பரம், விருத்தாசலம்  மற்றும் புதுச்சேரி பகுத்தறிவாளர்  கழகம்,  பகுத் தறிவு  ஆசிரியர்  அணி  மாவட்ட  பொறுப்பாளர்கள்  கலந்துரையாடல்  கூட்டம் 8.5.2022 ஞாயிறு  காலை  10.30 மணிக்கு விழுப்புரம்  புதிய  பேருந்து  நிலையம்  எதிரில்  உள்ள  ஏ.எஸ்.ஜி. திருமண  மண்டபத்தில்  நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு  மாநில  பகுத் தறிவாளர்  கழகத்  தலைவர்  இரா.தமிழ்ச்செல்வன்  தலைமை ஏற்றார். 

விழுப்புரம் மண்டலத் தலைவர் கோ. சா. பாஸ் கர்,  விழுப்புரம்  மாவட்டத்  தலைவர்  ப.சுப் பராயன்,  விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க. பரணிதரன்,  மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா,  விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கார் வண்ணன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் செஞ்சி துரை.திருநாவுக்கரசு வரவேற்புரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையுரையில், மாநாடு  நடைபெறுவது  விழுப்புரம் மாவட் டத்தில் என்பதை குறிப்பிட்டு விழுப்புரம்  மாவட்ட  பொறுப் பாளர்கள்  முக்கிய பணிகள்  என்னென்ன  என்பதையும்,  மாநாடு  தொடர் பான  எல்லாவகையான வழிகாட்டுதல்களை யும்  வழங்கிடவும்,  நம்மை வழிநடத்தவும்  பொதுச்செயலாளர்  முனைவர்  துரை. சந்திர சேகரன் வந்துள்ளார்  என்பதை  குறிப் பிட்டு  மாநாட்டு  பணிகள்  பற்றி  விரிவாக  பேசி  தன்னுடைய  தலைமை உரையை நிறைவு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் பணி

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக விழுப் புரம் மாவட்ட தலைவர் கி. கார்வண்ணன்,  கடலூர் மாவட்ட தலைவர்  தமிழன்பன்,  ஒன்றிய  செயலாளர்  ராஜேந்திரன்,  மாவட்ட  இளைஞரணி  தலைவர் அ. சதீஷ்,  மண்டல இளைஞரணி செயலாளர் த. பகவான்தாஸ்,  விழுப்புரம் மாவட்ட  செயலாளர்  அரங்க.பரணிதரன், மண்டல தலைவர் கோ.சா.பாஸ் கர்,  விழுப்புரம் நகர செயலாளர்  பழனிவேல்,  மாவட்ட ப.க.  துணைச் செயலாளர் வே. அம் பலவாணன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன்,  செஞ்சி பாபு,  மாவட்ட அமைப் பாளர் செஞ்சி கோபண்ணா, பெரியார் பற்றாளர் செந்தில்வேலன், திண்டிவனம்  நகர செயலாளர் க. பன்னீர்செல்வம், திண்டிவனம் மாவட்ட செயலாளர் பரந்தாமன், திண்டி வனம் மாவட்ட தலைவர் ஆர். அன்பழகன், டாக்டர் சிவராஜ் ஆகியோர்  மாநாடு  தொடர்பான  கருத்துகளை  தெரிவித்தனர் . தொடர்ந்து புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உரையில், மாநாடு ஏன்,  எதற்கு,  இயக்கப் பணிகளில் பகுத்தறிவாளர் கழகம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். தொடர்ந்து நிதி வழங்கிட வேண்டினார். மாநாட்டிற்கு விளம்பரம் செய்வது எப்படி என்பதைப் பற்றியும்  பேசினார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி

இறுதியாக  கருத்துரை  வழங்கிய திராவி டர் கழகப் பொதுச்செயலாளர்  முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செஞ்சியை தேர்ந்தெடுத் தது  ஏன், செஞ்சியில் மாநாடு நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன  என்பதை பற்றி சொல்லி, மாநாடு எப்படி இருக்க வேண்டும்,  எப்படி  எல்லாம்  இருந்தால்  மாநாடு  சிறப்பாக  இருக்கும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் கூறினார். மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் இடம் பெற வேண்டியவை என்னென்ன, என் னென்ன கலை நிகழ்ச்சிகள் நடைபெறலாம் என்பதை  விரிவாக எடுத்துரைத்து  எல்லா வற்றிற்கும்  மேலாக நிதி திரட்டுதல் பற்றி தெளிவாக உரையாற்றி நன்கொடைகள் பெறுவது எப்படி  என்பதையும் அழகாக விளக்கிக் கூறினார்.  மாநாடு வெற்றி என்பது நம்முடைய இனத்திற்கான வெற்றி என் பதை கூறி அனைவரும் இணைந்து பணியாற்றி வெற்றியடையச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இறுதியில் மாவட்ட ப.க. செயலாளர் வே.ரகுநாதன் நன்றிகூறி கூட்டத்தை முடித்தார்.

No comments:

Post a Comment