சென்னை, ஜூன் 1 இந்தியாவில் உயர்கல்வி பயிலச் செல்வோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) 46ஆவது பட்ட மளிப்பு விழா கல்லூரி வளாகத் தில் நேற்று (31.5.2022) நடை பெற்றது. இதில் 1,868 பேர் இளங்கலைப் பட்டம், 547 பேர் முதுகலைப் பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர் களுக்கு பதக்கங்கள் வழங்கி உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:
நந்தனம் கல்லூரி 5 படிப்பு களுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு புதிதாகத் தொடங் கப்பட உள்ள பி.காம். (நிதி), பி.எஸ்சி. (புள்ளியியல்), பி.ஏ. (பொது நிர்வாகம்) ஆகியவற் றைச் சேர்த்தால், இங்கு கற்பிக்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கை 16-ஆக உயரும்.
பெண்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. மாணவர்கள் படிக்கும் போதே வேலைவாய்ப்பு பயிற் சிக்கான திறன்களைப் பெற்று, வேலை தேடுவோராக இல் லாமல் வேலை அளிப்பவர் களாக மாற வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது ‘நான் முதல்வன்’ திட்டம்.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர் வுக்கு இணையான தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி அளவிலேயே பொதுத் தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதி கரிக்கும். எனவே, தமிழ்நாட்டுக்கு உகந்த வகையில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டு, தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை அமைத் துள்ளது. அந்தக் குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப் பிக்கும்.
அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்கல்வி பயிலும் பெண்களின் அதிகரிக்கும். இந்தியாவில் உயர்கல்வி பயிலச் செல்வோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். இது 53 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “இந்தக் கல்லூரி யில் 1,000 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குளிர்சாதன வசதியும் செய்து தரப்படும். மேலும், விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க, சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் புதிய விடுதி கட்ட ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரை வில் கட்டுமானப் பணிகள தொடங்கும்” என்றார்.
விழாவில், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ண சந்திரன், மண்டல இணை இயக்குநர் ஆர்.ராவ ணன், கல்லூரி முதலமைச்சர் ஜெயச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment