அவகாசம் வழங்கியும் தொழில் தொடங்காத நிறுவனங்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

அவகாசம் வழங்கியும் தொழில் தொடங்காத நிறுவனங்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு

சென்னை, ஜூன் 3-  உரிய கால அவகாசம் வழங்கியும் தொழில் தொடங்காத நிறு வனங்களின் ஒதுக்கீட்டினை கிளை மேலாளர்கள் ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தர விட்டுள்ளார். 

கிண்டியில் உள்ள தமிழ் நாடு சிட்கோ தலைமை அலு வலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் தால் நிறைவேற்றப்படும் திட் டங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது சிட்கோ தொழிற் பேட்டைகளில் உள்ள 34 நிறு வனங்களுக்கு விற்பனைப்பத் திரங்கள் மற்றும் தொழில் மனை ஒப்படைப்பு ஆணை களை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு அர சின் ரூ.161.20 கோடி மானியம்,  ஒன்றிய அரசின் ரூ.367.81 கோடி மானியம் மற் றும் தனியார் தொழில்  நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூ.739.27 கோடி மதிப் பில் செயல்படுத் தப்படும் 78 திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இக்கூட்டத்தில் குறு,  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், தமிழ் நாடு சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.கெஜலட்சுமி, பொது மேலாளர் ஆர்.பேபி மற்றும் நிறுவனத்தின் பொறி யாளர்கள், உயர் அலுவலர் கள், கிளை மேலாளர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசிய தாவது: டிசம்பர் 2021இல் நடைபெற்ற ஆய்வு கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ரூ.10 கோடி செலவில் 57 தொழிற்பேட் டைகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள், தெரு விளக்கு கள், புதர் செடிகளை அகற்று தல் மற்றும் அனைத்து தொழிற் பேட்டைகளின் நுழைவாயில் களிலும் பெயர் பலகை வைத் தல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நடப்பாண்டு அறி விக்கப்பட்ட 9 புதிய திட்டங் களின் பல்வேறு நிலை குறித் தும் கடந்த நிதிநிலை அறிக் கையில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில், நிறைவேற்றப் பட்ட ஏழு திட்டங்களை தவிர்த்து, பணிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் புதிய தொழிற் பேட்டைகள், பொது வசதி மய்யங்கள், பொது உற்பத்தி மய்யங்கள் ஆகிய 7 திட்டங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு பரித்து ரைத் துள்ள திட்டங்களுக் கான அனுமதி களை துரித மாக பெற்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒதுக்கீடு ஆணைகள் வழங்கி தொழில் தொடங் காத நிறுவ னங்களுக்கு விளக்கம் கோரி, உரிய கால அவகாசம் வழங்கி, தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய கால அவ காசம் வழங்கி தொழில் தொடங் காத நிறுவனங்களின் ஒதுக்கீட்டினை கிளை மேலா ளர்கள் ரத்து செய்ய வேண் டும். தனியார் தொழிற் பேட்டை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் மானியத்துடன் ரூ.137.19 கோடி மதிப்பீட் டில் அமைக்கப்பட்டு வரும் 9 தொழிற்பேட்டைகளில், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையினை விரைந்து பெற்று பணி களை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment