இந்தியன் எக்ஸ்பிரஸ்:
எந்தவொரு மதத்தையும் தேர்ந்தெடுக்கவோ அல்லது பின்பற்றவோ அரசமைப்பின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
இரட்டை நாக்குடையாய் போற்றி! போற்றி!!. "நம்பிக்கை மற்றும் "வரலாற்று உண்மைகள்" ஆகிய இரண்டின் அடிப்படையில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி மீதான இந்து உரிமைகோரலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆதரிப்பாராம். ஆனால், பிற வழிப்பாட்டு தலங்களுக்கும் இதே கோரிக்கையை ஏற்கவில்லையாம்.
இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். பன்னாட்டு மத சுதந்திரம் குறித்த 2021 அறிக்கையில் தனது உரையை ஆற்றிய அவர், சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை சுட்டிக்காட்டி னார். ஆனால் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தி இந்து:
பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கு:இன்றைய நிலையில், ஒவ்வொரு வகை குடிமக்களின் எண்ணிக் கையும் அவசியம், அதனால் அவர்கள் அரசின் அனைத்து நலத்திட்ட நடவடிக்கைகளின் பலனைப் பெற முடியும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் அஜய் குமார்.
. - குடந்தை கருணா
No comments:
Post a Comment