மதுரை, ஜூன் 1 மதுரை மற் றும் ராமேசுவரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை தலைமை தாங்கி கவனித்து வரு கின்ற பொறியாளர் வாழ் விணையர்களில் கணவர் மதுரை ரயில் நிலைய பணிகளையும், மனைவி ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளையும் கவனித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற விழா வில் எழும்பூர், ராமேசு வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணி களை துவக்கி வைத்தார்.
இதில் மதுரை ரயில் நிலைய பணிகள் 440 கோடி ரூபாய் செலவிலும், ராமேசுவரம் ரயில் நிலைய பணிகள் 120 கோடி ரூபாய் செலவிலும் மேற்கொள்ளப்பட உள் ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மதுரை மற்றும் ராமேசுவர ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகளை பொறியாளர் வாழ்விணையர்களான நந்தகோபால் மற்றும் ரதி ஆகியோர் மேற்கொள்ள உள்ளனர்.
இருவரும் தென்னக ரயில்வேயில் துணை தலைமை பொறியாளர்க ளாக பணியாற்றி வருகின் றனர். இருவரும் அது குறித்து தெரிவித்துள் ளது, "மறுசீரமைப்பு திட் டப் பணிகளை நாங்கள் தலைமையேற்று கவனிப் பதை நல்வாய்ப்புகளாக கருதுகிறோம். இருவரும் ஒரே திட்டத்தில் வெவ் வேறு ரயில் நிலையங் களில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி" என தெரிவித்து உள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் நாள் ஒன் றுக்கு 45000 பயணிகள் வந்து செல்வது குறிப்பி டத்தக்கது.
No comments:
Post a Comment