கூட்டத்தோடு கூட்டமாக ஆன்மீக வாதியாக இருந்தாலோ அல்லது வேஷம் போட்டாலோ எனக்கு எந்த நட்டமும் இல்லை. ஆனால், இந்த சமூகத்தில் நாத்திகனாக வாழ்வது சிரமம். குறிப்பாக, நாத்திகன் என வெளிக்காட்டிக்கொண்டு வாழ்வது சிரமம். இந்த உண்மை நாத்தி கர்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாத்திகர்களாக வெளிக்காட்டிக் கொள் வதோடு அல்லாமல் அது குறித்து பேசுப வர்கள் பல மடங்கு சிரமங்களை அனுப விக்க வேண்டிவரும் இந்த சமூகத்தில்.
வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார், உடன் பணிபுரிப வர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள், அரசு அதிகாரிகள் என பலதரப்பட்ட வர்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்து, அவர்களில் சிலர் எதிரிகளாகி, அதனால் பாதிக்கப்படுவது நாத்திகர்கள் சந்திக்கும் வழக்கமான பிரச்சினை.
இவ்வளவு சிரமங்களுக்கிடையே நாத்திகர்களாக பகுத்தறிவு பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஏதாவது இலாபம் இருக்கிறதா என்றால், இல்லவே இல்லை.
பிறகு ஏன் இவர்கள் இப்படி உங்க ளைப் போன்று இல்லாமல்?
சமூக அக்கறை!
ஆம். ஆன்மீகவாதிகள் ஒரு வட் டத்தை தாண்டி சிந்திப்பதில்லை. அவர் களால் இந்த சமூகத்தை முன்னேற்ற முடியாது. சமூகம் முன்னேற வேண்டு மானால், பகுத்தறிவு சிந்தனை தேவை. அது தளையற்ற சிந்தனை கொண்டவர் களால் மட்டுமே செய்ய முடியும்.
இந்த சமூகத்திற்காக, சுயநலமில்லா மல், தங்கள் நலனை பொருட்படுத்தாமல், தியாக உணர்வோடு தங்கள் வாழ்க் கையை கொடையாக்கி வாழ்பவர்கள் பகுத்தறிவோடு சிந்திக்கும் நாத்திகர்கள்.
உங்களுக்காகவே நாங்கள் வாழ் கிறோம். உங்களின் பாதுகாப்பிற்காகவே வாழ்கிறோம்! உங்கள் சந்ததியினரின் உயர்வுக்காகவே வாழ்கிறோம்...
நாத்திகர்களாக!
No comments:
Post a Comment