கொல்கத்தா,ஜூன்2- மேற்குவங்க முதலமைச் சர் மம்தா கூறுகையில், "நான் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூற விரும்பு கிறேன். 2024 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக வீட்டுக்குச் சென்றே ஆக வேண் டும். பாஜக மீண்டும் ஆட் சிக்குவர வாய்ப்பில்லை. 2024இல் பாஜகவின் வெறுப்பு, வன்முறை அர சியல் வரவேற்கப்படாது. புருலியா மண் எனக்கு மக்களுக்காக போராடும் சக்தியைக் கொடுத்துள் ளது. மக்கள் நலனைப் பாதுகாப்பதில் எனக்கு யார் மீதும் பயமில்லை. மக்களுக்காக என் முழு சக்தியையும் ஒருங்கி ணைத்து போராடுவேன். போலியான வாக்குறுதி களை கொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக அரசால் சாமான்ய மக்க ளின் வாழ்க்கை சிதைந் துள்ளது. மக்கள் விரோத திட்டங்கள் ஏழை மக் களை வாட்டுகிறது. ஒன் றிய அரசு கலப்படம் நிறைந்தது. பணமதிப்பு நீக்கம் போன்ற மிகப் பெரிய ஊழல் மூலம் நாட்டின் பொருளாதா ரத்தை சீர்குலைத்துள் ளனர்.
சிபிஅய், அமலாக்கப் பிரிவுகள் வேண்டாத வர்கள் மீது ஏவப்படும் அமைப்புகளாக உள்ளன. மோடி அரசு ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய் கிறது. மராட்டிய மாநில அமைச்சரை கைது செய் கிறது. ஹேமந்த் சோரன் வீட்டில் ரெய்டு நடக் கிறது. மேற்கு வங்கத்தில் யாரோ ஒருவர் நிலக்கரி திருடன் எனக் கூறப்படு கிறார். ஏன் பாஜக அமைச்சர்கள் யாரும் இதில் கைது செய்யப்பட வில்லை. ஊழலுக்கு எதி ரான பாஜக அரசு அவர் களையும் தானே கைது செய்திருக்க வேண்டும்'' என்றார்.
No comments:
Post a Comment