சென்னை, ஜூன் 3 வணிகர்கள் புகார் அளிக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறை சார்பில் ‘காவல் உதவி’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர்கள் சங்க மாநாட்டில் முதலமைச்சர், வணிகர்கள் காவல் துறையில் புகார் எளிதில் அளிக்க உதவி செயலியில் ‘வணிகர் உதவி வசதி’ ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து வணிகர்கள் காவல் துறை உதவியை நாட ‘வணிகர் உதவி’ என்ற வசதி ‘காவல் உதவி’ செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் வணிகர்கள், ரவுடிகளால் ஏற்படும் இடையூறுகள் மற்றும் இன்ன பிற பிரச்சினைகள் முறையே ரவுடி மாமூல், ரவுடிகளால் தாக்குதல், கடை, குடோனில் திருட்டு, கந்து வட்டி, கடையில் வாக்குவாதம், சண்டை மற்றம் இதர புகார்கள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் அனைவரும் ‘காவல் உதவி’ செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.
No comments:
Post a Comment