சென்னை, ஜூன் 9 சிமாட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் இன் உள் தர உறுதிப் பிரிவு மற்றும் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு இணைந்து ஆசிரியர்களுக்கு நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய விரிவுரையை ஏற்பாடு செய்தன. ஒன்றிய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசிய அறிவியல் தலைவர் டாக்டர். கணபதி டி. யாதவ், "நிகர பூஜ்ஜிய இலக்கு மற்றும் நிலைத்தன்மையின் நோக்கத்தில்: பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, கார்பன்டை ஆக்சைட் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உயிரியளவு மதிப்பாய்வு" என்னும் தலைப்பில் பசுமை மற்றும் தூய்மையான தொழில்நுட்பத்தை மேம்படுத்த மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் ஆசிரியர்களுக்கு விரிவுரையை வழங்கினார். சுற்றுச்சூழலுக்கும் எரிபொருளுக்கும் இடையிலான உறவையும் அவர் வலியுறுத்தி இந்நிகழ்வில் சிமாட்ஸ் -இன் நிறுவனர் மற்றும் வேந்தருமான முனைவர் என் எம் வீரையன் துணைவேந்தர் டாக்டர் சதாராம் சிவாஜி, கல்லூரி முதல்வர் டாக்டர் பி. ரமேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
Thursday, June 9, 2022
சுற்றுச்சூழலுக்கேற்ற எரிபொருள் நிலையான வளர்ச்சிக்கான கருத்தரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment