கடவுள்களுக்கா இந்தக் கதி? கடத்தப்பட்ட கடவுளர் சிலைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

கடவுள்களுக்கா இந்தக் கதி? கடத்தப்பட்ட கடவுளர் சிலைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு

புதுடில்லி, ஜூன் 2 வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கடவுள் சிலைகள் தமிழ்நாடு அரசிடம் நேற்று (1.6.2022) ஒப்படைக் கப்பட்டன. தமிழ் நாடு கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் திருடப் பட்ட கடவுள் சிலைகள் குறித்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை குறித்து சிலை தடுப்புப் பிரிவினரால் புலன் விசாரணை மேற்கொள் ளப்பட்டது. 

காணாமல் போன சிலை களை வெளிநாடுகளிலிருந்து மீட்பதற்கான முயற்சி காவல் துறையினரால் எடுக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக் குநர் சைலேந்திரபாபுவுக்கு உத் தரவிட்டுள்ளார். 

இதனையடுத்து சிலைகளை மீட்க தனிப்படை அமைக்கப் பட்டது. இதில் பல சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங் காட்சியகங்களிலும், கலைப் பொருள் சேகரிப்பாளர்களிட மும் இருப்பது தெரியவந்தது. இந்த சிலைகள் தமிழ்நாடு கோவில்களில் இருந்து திருடப் பட்டவை என்பதை நிரூபிக்க வேண்டிய சட்டப்படி செல்லத் தக்க சாட்சியங்கள் மற்றும் தடயங்களை சேகரித்து அந்த ஆதாரங்கள் தமிழ்நாடு அரசு மூலம் அந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்த சிலைகள் தமிழ்நாடு கோவில்களில் இருந்து திருடப் பட்டவை என்பதை சட்டப் படி நிரூபித்து சிலைகளை இந்தியாவிற்கு மீட்டு வர தமிழ்நாடு சிலை திருட்டு மற்றும் தடுப்புப் பிரிவு முயற்சி செய்து வந்தது. அதன் பயனாக கடந்த காலங்களில் தமிழ்நாடு கோவில்களில் இருந்து திருடப் பட்ட விலைமதிப்பற்ற 10 புரா தன உலோக மற்றும் கற்சிலை கள் அமெரிக்கா மற்றும் ஆஸ் திரேலிய நாடுகளின் அருங் காட்சியகங்களில் இருந்து மீட் கப்பட்டு அவை டில்லியில் உள்ள இந்திய தொல்பொருள் துறை யிடம் ஒப்படைக்கப்பட் டன. 

இந்த சிலைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று (1,6,2022) நடந்தது. மத்திய கலாசாரம் மற் றும் சுற் றுலாத்துறை அமைச் சர் கிஷன் ரெட்டி தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்கு நர் சைலேந்திரபாபுவிடம் சிலை களை ஒப்படைத்தார். அப் போது ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், காவல்துறை இயக்குநர் (சிலை திருட்டு தடுப்புப் பிரிவு) ஜெயந்த் முரளி மற்றும் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர். 

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள சிலைகளில் 2 துவாரபாலன் சிலைகள் தென்காசி மாவட்டம் அத்தா னநல்லூர் மூன்றீஸ்வரமுடை யார் கோவிலை சேர்ந்தவை. நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலையும், கங்காளமூர்த்தி, நரசிங்கநாதர் சிலைகள் தென்காசி மாவட் டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்க நாதர் கோவிலையும், விஷ்ணு, சிறீதேவி சிலைகள் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் வரதராஜபெருமாள் கோவி லையும் சேர்ந்தவை. மேலும் மீட்கப்பட்ட சிவன்-பார்வதி சிலை தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வான்மீகி நாதர் கோவிலையும், குழந்தை சம்பந்தர் சிலை நாகை மாவட்டம் சாயவனேஸ்வரர் கோவிலையும சேர்ந்தவை. 

நடனமாடும் குழந்தை சம்பந்தர் சிலை மட்டும் எந்த கோவிலை சேர்ந்தது என தெரியவில்லை. இந்த சிலைகள் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டு கும்பகோணம் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட கோவில்களில் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment