பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் காணொலி வாயிலாக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் காணொலி வாயிலாக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 3 பகுத்தறிவாளர்  கழக  மாநில  பொறுப்பாளர்கள்    கலந்துரையாடல்  கூட்டம்  07.05.2022  சனிக்கிழமை மாலை 7 மணிக்கு  காணொலி வாயிலாக  நடைபெற்றது.  கூட்டத்திற்கு  மாநில  பகுத்தறிவாளர்  கழகத்  தலைவர்  இரா.தமிழ்ச்செல்வன்  தலைமை  ஏற்றார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செய லாளர்   ஆ. வெங்கடேசன் அனைவரையும்   வரவேற்று உரையாற்றினார்.

இந்த  கூட்டத்தின்  நோக்கம் மற்றும்   சென்ற  மாதத்தில்  இருந்து   இதுவரை நடை பெற்ற செயல்பாடுகள்  பற்றி  பகுத்தறிவாளர்  கழக பொதுச் செயலாளர் வி. மோகன் உரையாற்றினார்.       

தொடர்ந்து   அடுத்த மாதம்  நடைபெற  இருக்கின்ற மாநில  மாநாட்டு நிகழ்வுகள் பற்றி யும்   அதற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் வழி யாக  ஒன்றிய  பொறுப்பாளர்களை  தொடர்பு கொள்ளும்  விதம் பற்றியும் பேசினார்.

மாநில துணை தலைவர்கள் தங்கள் பொறுப்பு மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் தொடர்ந்து விளக்கிக்  கூறிட வேண்டியது மாநில துணைத் தலைவர்களது  பொறுப்பு என்பதை விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து   மாநில துணை தலைவர்கள்  விருதுநகர் கா.நல்லதம்பி,  திருப்பத்தூர்  

ம. கவிதா, தஞ்சை கோபு. பழனிவேல், மத்தூர்  அண்ணா.சரவணன், தாம்பரம் கரிகாலன், அ.தா.சண்முகசுந்தரம், பேராசிரியர் சுலோச் சனா, ஆசிரியரணி  மாநிலத் தலைவர்   வா.தமிழ் பிரபாகரன் ஆகியோர்   தங் களுடைய  கருத்துகளை தெரிவித்தார்கள் மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதி கூறினார்கள் .

மாநாட்டில் என்னென்ன செயல்பாடுகள்  இருக்கலாம் என்பதை பற்றியெல்லாம் பேசி னார்கள். தொடர்ந்து மாநில பொறுப்பாளர்கள் அனைவரும்  தங்கள் மாவட்டங்களில்  தொடர்ந்து  தொடர்பில் இருப்பதாகவும், நன்கொடைகளை திரட்ட முழு முயற்சி எடுப்பதாகவும் கூறினார்கள். இறுதியாக பகுத் தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் உங்களுடைய  பணியால் மட்டுமே மாநாடு சிறக்க முடியும் என்பதை    விளக்கிக் கூறி கூட்டத்தை நிறைவுசெய்தார்.

தஞ்சை கோபு பழனிவேல் நன்றி கூறி, கூட்டத்தை நிறைவு  செய்தார்.

No comments:

Post a Comment