கள ஆய்வுகள் முக்கியம் : துறை செயலர்களுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

கள ஆய்வுகள் முக்கியம் : துறை செயலர்களுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 2  மக்கள் நம் மீது வைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். திட்ட செயல்பாடு களில் கள ஆய்வும், மக்களின் கருத்தை அறிதலும் மிக முக் கியம் என்று துறை செயலர்களு டனான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு துறைகளின்கீழ் அரசு வெளியிட்ட அறிவிப்பு களின் செயல்பாடுகள், அவற் றின் தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடனான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் நாள் ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதலமைச் சரின் செயலர் உதயச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் இறுதியில் முதலமைச்சர் பேசியதாவது:

அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்கள் விரைவாக நிறை வேற்றப்பட்டு வருவது ஆய்வில் தெரியவருகிறது. அதேநேரம், ஒரு சில துறைகளில் குறிப்பிட்ட திட்டங்களின் செயல்பாட்டில் தாமதத்தை சரி செய்து, அவற்றை விரைவுபடுத்த வேண்டிய அவசி யமும் உள்ளது. அது தொடர் பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

பல மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, மக்கள் நம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருப் பதை பார்க்கிறேன். அதை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். குறிப்பாக, ஏழை மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந் தவிதமான தொய்வும், தாமதமும் இருக்கக் கூடாது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், சாலை அமைத்தல், குடிநீர்த் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவ தில் தனிக்கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்தில் நிறை வேற்ற வேண்டும். அனைத்து துறைகளும் முடிந்தவரை நவீன தொழில்நுட்பத்தை பயன் படுத்தி திட்டங்களை செயல் படுத்த வேண்டும். இதன்மூலம் பணித்தரம் மேம்படுவதுடன், கால விரயம் குறையும்.

பிற மாநிலங்கள், வெளிநாடு களில் இதுபோன்ற திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப் படுகிறது என்பதையும், அதை விட நாம் எவ்வளவு சிறப்பாக அவற்றை வழங்கலாம் என்ப தையும் கண்டறிய வேண்டும். அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

திட்ட செயலாக்கம், கண் காணிப்பில் புதிய தொழில்நுட் பங்கள் எந்த அளவு புகுத்தப் படுகிறது என்பதில்தான் மாநி லத்தின் வளர்ச்சி உள்ளது. பல ஆண்டுகளாக செய்வதையே தொடர்வதால் புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது.

இந்த அரசின் 2-ஆம் ஆண் டில் அடியெடுத்து வைத்துள் ளோம். முதலாம் ஆண்டில் அறி விக்கப்பட்ட பல திட் டங்கள் நிறை வேற்றப்பட்டு இருந்தாலும், இன்னும் சில வற்றுக்கு அரசா ணை வெளியிட வேண்டியுள்ளது. அரசாணை வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பல நிறைவேற் றப்பட்டுள்ளன. இது பாராட் டத்தக்கது. அதேநேரம், பல்வேறு அறிவிப் புகளுக்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நடப் பாண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட்டவை மீது உரிய நடவடிக்கை எடுத்து மாத இறு திக்குள் அவற்றை செயல்படுத்த வேண்டும்.

போதிய நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணைகள் வெளியிட்ட பிறகு, துறைத் தலைவர்கள் எவ் வித தாமதமும் இன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தி, திட்டங் களின் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதைவிட முக்கியம், கள ஆய் வுகள் மேற்கொள்வதாகும். திட்ட செயலாக்கத்தின்போது தேவை யானவற்றில் மக்களின் கருத்து களையும் கேட்டறிய வேண்டும். மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் குடிநீர், சாலை, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு திட்டங்களை தொய்வின்றி சிறப்பாக நிறை வேற்ற வேண்டும்.

அரசின் சேவைகளான பல் வேறு சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மை சான் றிதழ்கள் போன்றவற்றை தாமத மின்றி வழங்குவதை துறைத் தலைவர்கள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே, மிகப்பெரிய உள் கட்டமைப்பு திட்டமாக இருந் தாலும், எளிய சேவை திட்டமாக இருந்தாலும் நீங்கள் அனை வரும் ஒரே அர்ப்பணிப்பு உணர் வுடன் செயல்பட வேண்டும். இது மக்களுக்கான திட்டம், இதை விரைவில், செம்மையாக மக்க ளுக்கு கொண்டு சேர்க்க வேண் டும் என்ற உயர்ந்த எண்ணத் துடன், துறை அமைச்சர்களு டன் இணைந்து, துறைத் தலை வர்கள் மற்றும் மாவட்ட ஆட் சியர்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

முதல் நாளில் நக ராட்சி நிர்வாகம், நீர் வளம், பொதுப் பணி, எரிசக்தி, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, தொழில், சிறு தொழில், தகவல் தொழில்நுட் பம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, சுற்றுலா, கலாச்சாரம், அறநிலையம், மனிதவள மேம் பாடு, கைத்தறி, வணிகவரி மற் றும் பதிவு, வருவாய், சிறப்பு முயற் சிகள், உள்துறை, போக்கு வரத்து, நிதி ஆகிய 19 துறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment