பேராவூரணியில் பெரியார் நகர்வு புத்தக சந்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

பேராவூரணியில் பெரியார் நகர்வு புத்தக சந்தை

பேராவூரணி,ஜூன் 4 - பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணியில் பெரியார் நகர்வு புத்தக சந்தை தொடக்கவிழா 23.5.2022 அன்று காலை சரியாக 10 மணி அளவில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புத்தக சந்தை தொடக்க விழாவிற்கு பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை சிதம்பரம் தலைமையிலும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர் விடுதலை வாசகர் வட்டத் தலைவர்   வேலு வரவேற்புடன் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லதம்பி பேராவூரணி இரா.நீலகண்டன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி காமராஜ், மாவட்ட கழக அமைப்பாளர் சோம. நீலகண்டன், மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் இராசலட்சுமி முன்னிலையிலும் எழுச்சியுடன் நடைபெற்றது.

பெரியார் நகர்வு புத்தக சந்தை முதல் புத்தக விற்பனையை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தொடங்கி வைக்க பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் முத்து மாணிக்கம்,  ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அன்பழகன் பேராவூரணி பேரூராட்சி துணைப் பெருந்தலைவர் பழனிவேல் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கவிஞர் பா.பாலசுந்தரம், நகர வர்த்தக கழக கட்டுப்பாடு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன், வணிகர் பேரவை மாவட்ட துணைத் தலைவர் மதினா முகமது முகைதீன், மறுமலர்ச்சி திமுக மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராம்சா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் தொழிலதிபர் ஏசியன் சம்சுதீன், அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஜேம்ஸ் பரமசிவம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர தலைவர் பாண்டியராஜன், பேராவூரணி   கான் முகமது, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சலாம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் செங்கமங்கலம் சிவா, தமிழ் வழி கல்வி இயக்க மெய்ச்சுடர் வெங்கடேசன், பேராவூரணி எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நீலகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். 

மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் பாலசுப்பிரமணியம் நன்றியுரை கூறினார் 

புத்தக சந்தை தொடக்க விழாவில் திராவிடர் கழக பேராவூரணி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், பேராவூரணி நகர செயலாளர் சந்திரமோகன், பள்ளத்தூர் கழகப் பொறுப்பாளர் சுயமரியாதைக்காரன் இல்ல சண்முகவேல், ஒன்றிய இளைஞரணி தலைவர்கள் பேராவூரணி கவுதமன், சேதுபாவாசத்திரம் வசி, இளைஞர் அணி செயலாளர் கழனிவாசல், சந்தோஷ் குமார், மதியழகன், நகர அமைப்பாளர் நீலகண்டன், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இராமச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன் ‘மந்திரமா, தந்திரமா?’ நிகழ்ச்சி செய்து காட்டினார் 24.5.2022 அன்று இரவு 7 மணி அளவில் கழக சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன் ‘பகுத்தறிவு புத்தக வாசிப்பின் அவசியம்’ குறித்து எடுத்துரைத்து உரையாற்றினார். இரண்டு நாள் புத்தக விற்பனை ரூ.21 ஆயிரத்து 440.

No comments:

Post a Comment