சென்னை,ஜூன்2- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பிரதமர் நரேந்திர மோடி குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ராம்குமாருக்கு சிவாஜி கணேசன் உயிரியல் வழி தந்தையாவார். ஆனால், என் போன்ற கோடிக்கணக்கானவர்கள் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்து வரும் 'நடிப்புலகின் மேதையாவார்'. எண்ணிலடங்கா பாத்திரங்களில் வாழ்ந்து வரும் அவரது நடிப்புத்திறன் எதிர்வரும் தலைமுறையும் கற்றறிய வேண்டிய கலைத்துறையின் இலக்கணமாகும் என்பதை எவரும் மறுக்க முடியாது. எட்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வரும் பிரதமர் மோடியின் உண்மை கலவாத சுத்தமான பொய் மூட்டை வியாபாரத்துக்கு ராம்குமாரும் கூட்டாளியாகி இருப்பதை அவரது அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment