விழுப்புரம், ஜூன் 4 விழுப்புரம் மாவட்டம் சேந்தநாட்டில் 3.6.2022 அன்று காலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 99 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் கலைஞரின் படத்துக்கு மலர்தூவி கலை ஞரின் அருமை பெருமைகளை சமூகநீதிக் கான அவரின் பங்களிப்புகளை விளக்கி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை யாற்றினார்.
மண்டல கழகத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம் மாவட்டத் தலைவர் தண்டபாணி மாவட்ட செயலாளர் பரணி தரன், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மண்டல இளைஞரணி செயலாளர் பகவன் தாஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்று கலைஞரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment