சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 நிரந்தர நீதிபதிகள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை, ஜூன் 2  சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், சத்தி குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment