சென்னை, ஜூன் 1 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர் களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட தொழில் கல்வி பாடங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம் பெறாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தொழில் கல்வி பாடங்கள் கற்பிக்க 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை. அதனால் போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற கார ணத்தை காட்டி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தொழில்கல்வி பாடப் பிரிவுகள் மூடப்பட்டன. அதேபோல 9 மற்றும் 10ஆம் வகுப் புகளிலும் 200க்கும் மேற்பட்ட தொழில் கல்வி ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வித்துறை நீக்கியது.
மேற்கண்ட 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் தொழில் கல்வி பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்துக் கான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து கடந்த ஆட்சியில் இருந்த அதிகாரிகள் கேட்டுப் பெற வில்லை. அதனால் இந்த ஆண்டும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் கல்வி ஆண்டில் தொழில் கல்வி பாடங்களை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள் ளது. இதனால், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான தொழில் கல்வி பாடம் அடுத்த கல்வி ஆண்டில் இடம்பெறாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்து அவற்றை நீக்கியுள்ளது. ஆனால் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் இந்த பாடங்கள் இருக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment