தேர்வுக்கு வராத 6.49 லட்சம் பேருக்கு துணைத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

தேர்வுக்கு வராத 6.49 லட்சம் பேருக்கு துணைத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

சென்னை, ஜூன் 3 பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு வராத 6 லட்சத்து 49   ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் துறை நடவடிக்கை எடுத் துள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படித்த சுமார் 20 லட்சம் மாணவ மாணவியருக்கு கடந்த மே மாதம் 5, 6 மற்றும் 10ஆம் தேதிகளில் பொதுத் தேர்வுகள் தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடந்தது.  மேற்கண்ட 3 வகுப்புகளிலும் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந் தனர். ஆனால் தேர்வு நடக்கும் போது சுமார் 6 லட்சத்து 49 ஆயிரம் மாணவ மாணவியர் மேற்கண்ட தேர்வில் பங்கேற்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பிளஸ் 2 தேர்வு எழுத 8 லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் பதிவு செய்திருந்த நிலையில் மொழிப்பாடத் தேர்வின்போது 43ஆயிரத்து 562 பேர் பங்கேற்கவில்லை. 11ஆம் தேதி நடந்த தேர்வின் போது 14 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. சரியாக 3.8 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. அதேபோல பிளஸ் 1 தேர்வு எழுத 8 லட்சத்து 92 ஆயிரத்து 740 பேர் பதிவு செய்திருந்த நிலையில் மொழிப்பாடத் தேர்வின் போது 43 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. 27ம் தேதி நடந்த தேர்வில் 18 ஆயிரத்து 476 பேர் பங்கேற்கவில்லை. அதிலும் சரியாக 4.8 சதவீதம் பேர் பங்கேற்க வில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், 9 லட்சத்து 74 ஆயிரத்து 321 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 45 ஆயி ரத்து 20 பேர் தேர்வு எழுத வரவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்க வில்லை.

மேற்கண்ட வகுப்புகளில் இருந்து தேர்வு எழுத பதிவு செய்திருந்தோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 லட்சத்து 30 ஆயிரம் பேர். இருப்பினும், பாட வாரியாக தேர்வு எழுத வராமல் இருந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 49 ஆயிரத்து 467 பேர். இவ்வளவு மாணவ, மாணவியர் தேர்வு எழுத வராமல் விட்டதற்கு காரணம் கரோனா தொடர்பான அச்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதனால் முதல் நாள் தேர்வு எழுத வராமல் போனவர்கள் தொடர்ந்து தேர்வுகளை எழுத வராமல்  இருந் துள்ளனர். சில மாணவர்கள் வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு எழுத வராமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் இடை நிற்றல் இல்லாமல் படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக உயர் கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. கரோனா அச்சத்தால் தேர்வு எழுத வராத மணவர்களுக்கு துணைத் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு அரசு உத்தர விட்டுள்ளது. 

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறையின் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்  சுற்றறிக் கை அனுப்பியுள்ளனர்.

அதில் 2022ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவ மாணவியர் குறித்த ஆய்வுக்கூட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் தலைமையில் நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தில் 10, 

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத வராமல் விட்ட மாணவ மாணவி யரை உடனடித் தேர்வில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.  

இதற்கான செயல்திட்டத்தை அனைத்து  உயர்நிலை, மேனிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment