மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5.4-இலிருந்து 4.1 சதவிகிதமாக சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5.4-இலிருந்து 4.1 சதவிகிதமாக சரிவு

புதுடில்லி, ஜூன் 2- நாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2021-2022ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்கள்) 4.1 சதவிகிதம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

முந்தைய 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டு வளர்ச்சியைக் காட்டிலும் இது குறைவாகும். கடந்தாண்டின் மார்ச் காலாண்டில் ஜிடிபி 5.4 சதவிகி தம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. எனினும், 2021-22 நிதியாண்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8.7 சதவிகிதமாக உள்ளது என்று தேசிய புள்ளி யியல் அலுவலக (ழிஷிளி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு நீள்ளது. முந்தைய 2020-2021 நிதியாண்டில் மைனஸ் 6.7 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பாண்டில் பொருளா தாரம் வளர்ச்சி கண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.  

அதேபோல நாட்டின் அடிப்படைத் தொழிற்துறைகள் எனப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் வளர்ச்சியும் 2022 ஏப்ரலில் 8.4 சதவிகிதம் என்ற வளர்ச்சியை அடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.


No comments:

Post a Comment