சென்னை, ஜூன் 4 சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட் டிகளிடமிருந்து 50 நாள்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணை யர் சங்கர் ஜிவால், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி 10 அழைப்பு மய்யங்களைத் திறந்து வைத்தார். தொடர்ந்து மேலும் 2 அழைப்பு மய் யங்கள் சேர்க்கப்பட்டன.
இந்த 12 காவல் அழைப்பு மய்யங்கள் மூலம் போக்கு வரத்து விதிமீறல் வழக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்குத் தகவல் தெரி விக்கப்பட்டு, ஒரு வாரத் துக்குள் அபராதம் செலுத்து மாறு அறிவுறுத்தப்பட்டது.
தவறும்பட்சத்தில் மேற் படி வழக்குகள் நீதிமன்றங் களுக்கு அனுப்பப்படும் என் றும் அறிவுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 50 நாள்களில் 2,73,284 வழக் குகள் தொடர்பாக ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்து வதற்கான வசதியை மேம் படுத்த, மேலும் சில நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வாகன ஓட்டு நர்களும், தங்கள் வாகனத் துக்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள் ளதா என்பதை இணையத் தில் சரிபார்த்து, விரைவில் அபராதம் செலுத்த வேண் டும். மேலும், சாலை விதி களை முறையாகக் கடைப் பிடித்து, அபராதம் செலுத்த வேண்டிய சூழல் இல்லாத நிலையை உருவாக்க உதவ வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத் தியுள்ளார்.
No comments:
Post a Comment