44ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னம்: முதலமைச்சர் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

44ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னம்: முதலமைச்சர் அறிமுகம்

சென்னை, ஜூன் 10   தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.6.2022) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44ஆவது ‘செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டிக்கான  இலச்சினைமற்றும் சின்னம் ஆகி யவற்றை அறிமுகப்படுத்தினார். முதன் முறையாக தமிழ்நாட்டில்  ‘செஸ் ஒலிம்பியாட்' போட்டி நடைபெறவுள்ளது.  

இப்போட்டியானது சென் னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000க்கும் மேற்பட்ட பன்னாட்டு சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்க னைகள் பங்கேற்கவுள்ளனர்.  

மேலும், இந்தப் போட்டியினை உலகமே வியக்கும் வகையில் நடத் திட முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், பன்னாட்டு சது ரங்க கூட்டமைப்பினர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப் பட்டு பணிகள் கண்காணிக்கப்பட்டு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. 44-ஆவது பன்னாட்டு செஸ் ஒலிம்பி யாட் போட்டிக்கான ஜோதி ஏற் றப்பட்டு நாடு முழுவதும் வலம் வரவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இப்போட்டி குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே சதுரங்க போட்டிகள் நடத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.  

மேலும், பேருந்துகள், ரயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் இப்பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி குறித்து விளம்பரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி யில், வண்ண விளக்குகளால் ஓளிரூட்டப்பட்ட 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட் டிக்கான இலச்சினை மற்றும் “தம்பி” என்கிற சின்னத்தினையும் அறிமுகப்படுத் தினார். தொடர்ந்து 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட் டிக்கான 50 நாள் கவுண்ட் டவுன் பொதுமக் களின் பார்வைக்காக ஒளிப்படக் காட்சியாக ரிப்பன் கட்டடத்தில் தொடங்கி வைத் தார். 

மேலும், “# சிபிணிஷிஷி சிபிணிழிழிகிமி 2022” என்ற பிணீsலீ ஜிணீரீ-யை முதல மைச்சர் வெளியிட, அகில இந் திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர் பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment