இந்தியாவில் 3 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

இந்தியாவில் 3 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

புதுடில்லி, ஜூன் 2  இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 712 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 745-அய் விட அதிகமாகும். 

இதனால், நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் நாடு முழுவதும் இதுவரை 193 கோடியே 70 லட்சத்து 51 ஆயிரத்து 104 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment