திருமலை, ஜூன் 2- தெலங்கானா வில் இரும்பு தேரை இழுத்து சென்றபோது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நம்பள்ளி அடுத்த கேதேப் பள்ளியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சிறீராமநவமி நாளில் கோயிலில் இருந்து புதிதாக வாங்கப்பட்ட இரும்பு தேரு டன் சுவாமி ரத உற்சவம் ஏற்பாடு செய்யப்பட் டது. பின்னர் கோயிலுக்கு அருகே உள்ள வேப்ப மரத்தின் அடியில் தேர் விடப்பட்டது. இந் நிலையில், சமீப நாட் களாக கிராமத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், தேரை கிராமத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலை வில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைக்கு கொண்டு சென்று நிறுத்த பூசாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஊர் பெரியவர் தயானந்தாவின் உதவியை பூசாரிகள் நாடினர். தயானந் தவின் வேண்டுகோளின்படி 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் தேரை கொட்டகைக்கு கொண்டு செல்ல உதவ முன் வந்தனர். அதன்படி, தேரை இழுத்து சென்றனர். தேர் கொட்டகை அருகே சென்ற போது, தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசியது. இதில் மின் சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படு காய மடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment