குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 3ஆம் நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 3ஆம் நாள்

நால்வருணத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டதுதான் ‘ஹிந்துத்துவா’

அதை வெல்லும் சக்தி திராவிடர் இயக்கத்திற்கு உண்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 'ஹிந்துத்துவா'வை அம்பலப்படுத்தி பாடம் நடத்தினார்

குற்றாலம். ஜூன் 11- குற்றாலம் பயிற்சி முகாமின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் வீகேயென் மாளிகை யில் காலை 10 மணிக்குத் தொடங்கியது. முகாமில் மாணவர்கள் மொத்தம் 119 பேர் இருந்தனர். இதில் மாணவிகள் 34 மாணவர்கள் 85 ஆகும். இரு பாலரிலும் பட்டதாரி மாணவர்கள் 34, பொறியி யல் மாணவர்கள் 7, மீதமுள்ளவர்கள் பள்ளிப் படிப்பு மாணவர்கள் ஆவர். குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து 45 மாணவர்கள் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. காலை யில் நான்கு வகுப்பு, பிற்பகலில் மூன்று வகுப்பு நடை பெற்றது. இரவு உணவுக்குப்பிறகு பட்டி மன்றம் நடைபெற்றது. 

முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தென்மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர் டேவிட் செல்லத்துரை, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் முருகன், மண்டலச் செயலாளர் அய்.ராமச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.சவுந்திரபாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ச.குருசாமி, மண்டலத் தலைவர் சு.காசி, நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, செயலாளர் ச.இரா சேந்திரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மு.முனியசாமி ஆகியோர் சுற்றிச் சுழன்று பணியாற்றினர்.

சமூகநீதிக்கான சவால்கள்

முதல் வகுப்புக்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் வருகை பதிவேடு எடுத்தார். அதைத் தொடர்ந்து “சமூகநீதிக்கான சவால்கள்” எனும் தலைப்பில் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி வழக்கம் போல் படக்காட்சி மூலம் வகுப்பெடுத் தார். அதில் உயர் கல்வித்துறையில் நாம் எப்படி புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை துல்லியமான புள்ளி விவரங்களை போட்டுக் காட்டி பாடம் நடத்தினார். இடையிடையே பாடம் தொடர்புடைய கேள்விகள் கேட்டு, பதில் சொல்கிற மாணவர்களுக்கு எழுதுகோல் பரி சளித்தார். தொடர்ந்து குலக்கல்வித் திட்டம், 9000 ரூபாய் வருமான வரம்பாணை, மண்டல் ஆணையம், 69% இடஒதுக்கீடு ஆகியவற்றை சவாலுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றதையும், இப்போது நீட், தேசியக் கல்விக் கொள்கை ஆகியவை புதிய சவால்கள். எதிர்கொண்டு வெல்லும் சக்தி திராவிடர் இயக்கத்திற்கு உண்டு என்று விளக்க மாக பாடம் நடத்தினார்.

‘ஹிந்துத்துவா' என்பது 

பார்ப்பன ராஜ்யம்தான்

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, ஆசிரியர் அவருக்கு ஆடை அணி வித்து மரியாதை செய்தார். அதேபோல் வீகே யென் உரிமையாளர் ராஜாவுக்கு ஆடையணி வித்து ஆசிரியர் மரியாதை செய்தார். முகாம் சிறக்க ரூபாய் 25,000 நன்கொடை அளித்த தி.மு.க.தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் மா.சின்னத்துரை, டேவிட் செல்லதுரை யின் நண்பரும், தொழிலதிபருமான பாலகிருஷ் ணன் ரூபாய் 58,000 நன்கொடை அளித்துள் ளதை பாராட்டும் வண்ணம் அவருக்கு ஆசிரி யர் ஆடையணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது வகுப்பு மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் நடைபெற்றது. காரணம் வகுப்பின் தலைப்பு “ஹிந்துத்துவா” பாடம் நடத்தியவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார். ஆசிரியர் உள்ளே நுழையும் போதே மாணவர்கள் அனை வரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி அவரை வரவேற்றனர். தொடக்கத்தில் குற்றாலம் பயிற்சிப் பட்டறையின் வரலாற்றை சுருக்கமாக நினைவு கூர்ந்தார். தொடர்ந்து நால்வருணத்தை நிலைநிறுத்த சமீபத்தில் உருவாக்கப்பட்டதுதான் “ஹிந்துத்துவா” என்றும் அதற்கு அடிப்படையாக, குஜராத் பார்ப்பனர் தயானந்த சரஸ்வதி, வங் காளப் பார்ப்பனர் அரவிந்தகோஷ், விவேகானந் தர், வி.டி.சவர்க்கார், கோல்வால்கர் ஆகிய அய்ந்தும் உள்ளது என்று பட்டியலிட்டார். அதை தனித்தனியாக விளக்கிப் பேசினார். ஹிந்துத்துவா என்பது பார்ப்பன ராஜ்யம்தான். அதனால்தான் பார்ப்பனர்கள் தங்களின் சிறு பான்மையை சூழ்ச்சியால் ஹிந்துத்துவா என்ற பெயரில் பெரும்பான்மை ஆக்கிக் கொண்டிருக் கிறார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, அதையும் வெல்லக்கூடிய சக்தி திராவிடர் இயக்கத்திற்கு உண்டு” என்று கூறி மாணவர்களை நிமிர வைத்தார்.

திராவிடர் இயக்கத்தின் தமிழ்த்தொண்டு

தேநீர் இடைவேலைக்குப் பிறகு முனைவர் எழிலரசன் “திராவிடர் இயக்கத்தின் தமிழ்த் தொண்டு” எனும் தலைப்பிலும், நான்காம் வகுப் பாக முனைவர் அதிரடி அன்பழகன் “கழகம் கண்ட களங்கள்’ எனும் தலைப்பிலும், மதிய உணவுக்குப் பிறகு முனைவர் நேரு ”மூடநம் பிக்கை வளர்ச்சிக்குத் தடை” எனும் தலைப்பி லும், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் “மதவாத அரசியல்” எனும் தலைப்பிலும், கவிஞர் கலி.பூங்குன்றன் “தமிழர் தலைவரின் தனித்தன் மைகள்” எனும் தலைப்பிலும் பாடம் நடத்தினர். இரவு உணவுக்குப்பிறகு “பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலனா? பகுத்தறிவா?” எனும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. நடுவ ராக மா.பால்ராசேந்திரம் இருந்து ஒருங்கிணைத் தார். கவிஞர் கலி.பூங்குன்றன், முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.

No comments:

Post a Comment