பட்டதாரிகளுக்கு அழைப்பு! உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 210 காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து மாத ஊதியமாக ரூ.35,400 வரை பெறலாம்.
டில்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு இளையோர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
உச்சநீதிமன்றத்தில் இளையோர் நீதிமன்ற உதவியாளர் ((Junior Court Assistant)பணிக்கான 210 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.35,400 கிடைக்கும். பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், மேனாள் ராணுவ வீரர்களுக்கு அரசு சலுகைகள் படி வயது தளர்வுகள் உண்டு. வயதானது 01.07.2022 தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். விண்ணப்பத்தாரர்கள் இணை வழி எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sci.gov.in இணையதளம் சென்று இணையம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக உள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 10.07.2022ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களைhttps://main.sci.gov.inrecruitment இணையதளத்தில் பார்க்க வேண்டும். உரிய அறிவிப்பைhttps://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355. கிளிக் செய்து தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.
No comments:
Post a Comment