தமிழ்நாட்டிற்கு நபார்டு வங்கி ரூ.32,443 கோடி நிதியுதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

தமிழ்நாட்டிற்கு நபார்டு வங்கி ரூ.32,443 கோடி நிதியுதவி

சென்னை, ஜூன் 11  நபார்டு வங்கியின் தலை மைப் பொதுமேலாளர் டி.வெங்கட கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நபார்டு வங்கி தமிழ்நாட்டிற்கு வழங்கும் நிதியுதவி கடந்த 2021-_2022-ஆம் ஆண்டில் ரூ.27,135 கோடியிலிருந்து ரூ.32,443 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டு உள்கட்டமைப்பு மேம் பாட்டுக்காக மாநில அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு ரூ.4,364 கோடி வழங்கப் பட்டது.

மேலும், நபார்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுதவியின் கீழ், ரூ.1,500 கோடி யும், மீன்விதைப் பண்ணைகள், மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீனவர் களுக்கான பயிற்சி மய்யங்கள் ஆகிய திட்டங்களை செயல் படுத்துவதற்காக ரூ.172 கோடியும் விடுவிக்கப் பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் தொழில் வளர்ச்சி மய்யத் தில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ரூ.38 கோடியும், நுண்ணீர் பாசன நிதியின் கீழ்ரூ.182 கோடியும், சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்கு வதற்காக, கிடங்கு உள்கட்டமைப்பு நிதியின்கீழ் ரூ.104 கோடியும் வழங்கப்பட் டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் பல்வேறு நடவடிக் கைகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி உதவி வழங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இவ்வாறு வெங்கட கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment